• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடு

Byஜெ.துரை

May 29, 2023

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்
“UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் அமைந்துள்ள சத்யம் திரையரங்கில் சிறப்பாக நடை பெற்றது.


இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கைக்கு உதவி வருகிறார் மீனா சாப்ரியா. இவரின் சுயசரிதை புத்தகம் “UNSTOPPABLE” என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.