• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆர்ஆர்ஆர் பட விளம்பர பாணியை கடைபிடிக்கும் புஷ்பா – 2 படக்குழு

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்தப் படம் 2021ம் ஆண்டு டிசம்பரில் பல மொழிகளில் வெளியானது. சுமார் 400 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்து சூப்பர் ஹிட் பட பட்டியலில் இணைந்தது.
இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் வித்தியாசமான தோற்றத்தையும் ‘புஷ்பா எங்கே?’ என்ற மாஸான கான்செப்ட் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீசருக்கு மட்டும் ரூ.4 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை போல பிரம்மாண்ட வெற்றியை பெற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக அடுத்தடுத்த விளம்பரத்துக்குப் பெரிய தொகையை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.