• Tue. May 7th, 2024

பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார் என பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் பேட்டி

ByN.Ravi

Apr 5, 2024

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவமிகள் வேண்டு கோளின்படி, தென் மாநில கோவிலுக்கு புனித யாத்திரை மேற் கொண்டுள்ளார். அதன்படி,
ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியான பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மதுரை வருகை புரிந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சுவாமிகள், சின்ன சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை புரிந்த சுவாமிகளுக்கு மதுரை சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் வெங்கட் ரமணி, மற்றும் ராமேஸ்வரம் சங்கர மடத்தின் நிர்வாகி ஆடிட்டர் சுந்தர் மதுரை அனுஷத்தின் அணுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை சங்கர் மடம் வாத்தியார் ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பத்திரிகையாளர் சந்திப்பில், பாரத நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற நடந்தது தான் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.
500 வருடமாக இருந்த ராமர் கோயில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது‌. பாரத நாட்டில் ராம ராஜ்யம் ஏற்பட இது வழிக்காட்டியுள்ளது‌. வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாது‌. தென் இந்தியாவில் இருந்து நிறைய மக்கள் அயோத்திக்கு வருகின்றார்கள். அயோத்தி ராமர் கோயில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளது‌. பிரதமர் நரேந்திர மோடி ஜனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார்.
இந்த தேர்தலில் அயோத்தி ராமர் கோவிலின் தாக்கம் இருக்குமா என்ற கேள்விக்கு
மழுப்பலாக பதில் கூறினார்.
தென் மாநிலங்களுக்கு புனித யாத்திரைக்காக அயோத்தியில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் ராமேஸ்வரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்
இளையாத்தான்குடி கைலாச நாதர் கோவில், கனக துர்க்கை கோவில்,
தஞ்சாவூர் பெரிய கோவில், பங்காரு காமாட்சி அம்மன் கோவில், திருவிடைமருதூர் , சிதம்பரம் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்தனர்.
சுவாமிகளுடன் சன்னியாசி சிஷ்யர்கள் சங்கரானந்த கிரி பிரமானந்த சரஸ்வதி தஷ்ன பாரத யாத்திரை குழு பொறுப்பாளர் வழக்கறிஞர் வேணு கோபால் ஆகியோர் வந்தனர். சுவாமிகள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *