• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Byவிஷா

Oct 14, 2024

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் – 21 வரை நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடக்கம். 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும்
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

3.3.25 – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
6.3.25 – ஆங்கிலம்
11.3.25 – கணிதம், விலங்கியல், வணிகவியல்
14.3.25 – கணினி அறிவியல்
18.3.25 – உயிரியல், தாவரவியல், வரலாறு
21.3.25 – வேதியியல், கணக்குப்பதிவியல்
25.3.25 – இயற்பியல், பொருளியல்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

5.3.25 – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
10.3.25 – ஆங்கிலம்
13.3.25 – கணினி அறிவியல்
17.3.25 – உயிரியல், தாவரவியல், வரலாறு
20.3.25 – இயற்பியல், பொருளியல்
24.5.25 – கணிதம், வணிகவியல்
27.5.25 – வேதியியல், கணக்குப்பதிவியல்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

28.3.25 – தமிழ்
2.4.25 – ஆங்கிலம்
7.4.25 – கணிதம்
11.4.25 – அறிவியல்
15.4.25 – சமூக அறிவியல்