• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

Byவிஷா

Nov 21, 2024

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
2024 – 2025ம் ஆண்டு கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதன்படி அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 துவங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், அப்போது மூன்றாம் பருவம் தொடங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு வரை விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் விடுமுறையையும் சேர்த்து 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கும்.