• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Byவிஷா

Apr 30, 2025

சென்னை மாநகருக்குள் கட்டுமானப் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
20 ஆயிரம் சதுர மீட்டர் வரையான தளங்களில் விதிமீறலுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், 500 சதுர மீட்டர் பரப்பளவு வரையான கட்டிடங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், நடுத்தர, குறைந்த மதிப்பு கொண்ட கட்டிடங்களை விதிமீறல்களை சரிசெய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.