• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

ByKalamegam Viswanathan

Mar 14, 2025

பழனி ஆயக்குடி பேரூராட்சி அலுவலக அருகில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் மற்றும் சாலையோர் வாகன ஓட்டிகள் அவதி புகார் – மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ககாங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு 18 வார்டுகள் உள்ளது 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 18 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி அருகில் உள்ள இடத்தில் வைத்து மக்கும் குப்பைகள் ,மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்கான இடத்தில் சுமார் ஐந்து டன் இருக்கும் மேலாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்காக கொட்டப்பட்ட குப்பைகள் எதுவும் குப்பைகள் தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டு உள்ளதால் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு உட்படுவதாகவும் அதேபோல சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்துடன் கடந்து செல்வதாகவும் ,பாதயாத்திரை வரும் பக்தர்கள் இந்த பகுதியில் பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேரங்களில் தங்கி செல்வர் ,இந்த குப்பையால் வரும் துர்நாற்றத்தால் பாதயாத்திரை வரும் பக்தர்களும் முகம் சுளித்தபடி சென்று வருகின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது குப்பை கொட்டுவதற்கான இடம் எங்கும் இல்லை என்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதியில் சட்ட பாறை என்னும் இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு தேர்வு செய்து இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்ட போது அருகில் இருந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டம் செய்ததாகவும் இதனால் குப்பைகளை கொட்ட முடியாமல் அவதி அடைவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வந்தவர்கள் தொடர்ந்து இந்த குப்பைகளை அகற்றபடவில்லை என்றால் அடுத்தகட்டமாக பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.