• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வெள்ளம் போல ஓடும் பாதாள சாக்கடை நீர் நோய் தொற்றில் அவதிப்படும் பொதுமக்கள்..,

ByKalamegam Viswanathan

Sep 9, 2026

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 70 வது வார்டு திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு கலைமகள் தெரு கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து சாலையில் பாதாள சாக்கடை நீரானது ஆறு போல ஓடுகிறது இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுக்கு உள்ளாகி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் ஒரு முறை கூட அந்த பக்கம் கூட வரவில்லை என அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆறு போல ஓடும் பாதாள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது