• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் சுவாச பிரச்சனையால் கடும் பாதிப்பு

ByVasanth Siddharthan

Apr 21, 2025

பழனி நகராட்சி குப்பைக்கிடங்கில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கபடாததால், தொடர்ந்து சில நாட்களாக கொட்டபடும் குப்பைகளை மர்மநபர்கள் தீ வைத்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் சுவாச பிரச்சனை மற்றும் அருகில் இருக்கும் காய்கறி மார்கட் வியாபாரிகள் முக கவசம் அணிந்நபடி வேலை செய்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் மொத்தம் 33வார்டுகள் உள்ளன. நகரில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி, பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆகியோராலும், நாள்தோறும் அதிகளவிலான குப்பைகள் உருவாகிறது. இவ்வாறு சேரும் குப்பைகளை சேகரித்து பழனி பெரியப்பா நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. அங்கு வைத்து இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கபட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இயந்திரங்களை இயக்கபட்டடு தரம் பிரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதனால் நகராட்சி குப்பைக்கிடங்கில் அவ்வப்போது திடீரென தீப்பிடித்து எரிவதும், தீயணைப்பு துறையினர் வந்து அனைப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குப்பைக் கிடங்கில் தீப்பற்றி எரிவது சகஜமானது. தீ எரிவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை‌. இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் தீ பிடித்து எரியத் துவங்கிய, தீயானது தற்போதுவரை எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.

தொடர்ந்து எரியும் தீயால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கமிசன் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புகையால் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. குப்பைக் கிடங்கில் ஏற்படும் தீயானது இயற்கையாக ஏற்படுகிறதா? அல்லது திட்டமிட்டே தீ வைக்கப்படுகிறதா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.