திண்டுக்கல், பழனிரோடு, 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ஐய்யன்குளம் இக்குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்து குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் ஆண் மயில் ஒன்று குளத்தில் உள்ள ஆகாய தாமரையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து சின்ன அய்யங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சின்ன அய்யங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் போராடி மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.