மதுரை வளையங்குளத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பாரப்பத்தி, எலியார்பத்தி, வளையப்பட்டி, சோளங்குருணி நல்லூர், ஆலங்குளம் ஐயர் 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க பாதையாத்திரை ஆக செல்வார்கள்.
இவர் பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களுக்கு வலையங்குளத்தில் கடந்த 16 ஆண்டுகளாக குருநாதர் ஆறுமுகம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு முருகனின் ஆறுப்படை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்களுக்கு பதினாறு ஆண்டுகளாக வளையங்குளம் கிராமத்தில் வெண்பொங்கல்,கேசரி, புளியோதரை, சாம்பார் சாதம்,அன்னதானமாக வழங்கப்பட்டது.
வலையங்குளம் அன்னதான குழு தலைவர் ஆறுமுகம் மற்றும் முருக பக்தர்கள் திருப்பதி . கிருஷ்ணன் அன்னதான குழு மற்றும் பொது மக்ககளின் முயற்சியாலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.