• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டம்- எடப்பாடியாருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

Byதரணி

Sep 26, 2022

சிவகாசியில் வரும் 29ம் தேதி திமுக அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தறும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை உயர்த்திய விடியா திமுக அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்க்காக பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கும் பணிகள்நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்
இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பாக நேற்று நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் விஜயகுமாரன் தலைமை வகித்தார். அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, நகர செயலாளர் முகமது நெய்னார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மச்சராசா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது… சிவகாசிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் .கண்டன பொதுக்கூட்டம் திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், அமைப்புசாரா ஓட்டுநா் அணிமாவட்ட செயலாளா் சேதுராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் , சரவணன், மிக்கேல்ராஜ், அம்மா பேரவை சரவணன், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன். பொதுக்குழு உறுப்பினர் அருணாநாகசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் கண்ணன், சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் ஆரோக்கியம், மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய கழக நகர கழக வார்டு கழக நிர்வாகிகள் சார்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.