
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 பேரை கடித்த வெறி நாய். என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் நகராட்சி நிர்வாகம்? மனித உயிர் முக்கியமா நாய் உயிர் முக்கியமா என தெரியாமல் தடுமாறுவதாகவும் கர்ப்பத்தடை செய்த பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட்டாலும், வெறிபிடித்து நாய்கள், மனிதர்களை கடித்து குதறுவதாகவும் உரிய வழிகாட்டுதலை அரசு உருவாக்கித் தர வேண்டும் எனவும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பேட்டி….
நாய் கடியால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் நகர் மன்ற தலைவர் அரசுக்கு கோரிக்கை….
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது இதில் கலந்துகொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் ஒரே நாளில் எட்டு பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர்களின்புகாரைத் தொடர்ந்து நாய் கடியால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொது மக்களை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு சந்தித்து ஆறுதல் கூறினார்.ஆறுதல் கூறிவிட்டு வெளியே வந்த போது அரசு மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே நாய்கள் சுற்றித் திரிவதை பார்த்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுவதாக கூறினார்….
மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு கூறியதாவது….
திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது நாய்களைப் பிடித்து கர்ப்ப தடை செய்து அந்தந்த பகுதிகளிலேயே விட்டாலும் அவைகள் வெறிபிடித்து பொதுமக்களை கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறது நாய்களை கொல்லக்கூடாது சித்திரவதை செய்யக்கூடாது என ப்ளூ கிராஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது நாய் உயிர் முக்கியமா மனித உயிர் முக்கியமா என முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருக்கிறோம். பொது மக்களின் புகாரின் படி நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து அந்தந்த வார்டு பகுதிகளில் விட்டு வருகிறோம். என்ற போதிலும் இதற்கு நிரந்தரமான தீர்வினை தமிழக அரசு ஏற்படுத்தித்தி தர வேண்டும் அரசு நாய் பிடிக்கும் விசயத்தில் எங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார்.அப்போது நகர் மன்ற உறுப்பினர்கள் பலரும் உடன் இருந்தனர்…..
