விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் டான் செம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் ஆங்கில வழி கல்வியை குறைந்த கட்டணத்தில் பயின்று வந்தனர்.

தொடர்ந்து இந்த பள்ளியை மேம்படுத்த அரசு எவ்வித முயற்சியும் செய்யததால் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நமது ஆலங்குளத்தின் அடையாளமாக திகழக்கூடிய இந்த டான்சம் ஆலையையும் ஆலைக்குச் சொந்தமான டான்சம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியையும் ,தரம் உயர்த்த கோரியும் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகள் சார்பில் ஏராளமான போராட்டங்களையும் ஆலை பாதுகாப்பு கமிட்டி சார்பில் நடத்தியுள்ளது.

முக்கியமாக ஆலை உற்பத்தி பாதிக்கப்படும் பொழுதும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த ஆலை நிர்வாகம் எடுக்கும் போதெல்லாம் ஆலைப் பாதுகாப்பு கமிட்டி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. 1800 மாணவ மாணவிகள் படித்த டான்சம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் எச்சரிக்கை செய்து வந்து கொண்டிருக்கிறோம் ஆனால் அந்தக் கோரிக்கையை செவிசாய்க்காதன் விளைவாக இன்று டான்சம் பள்ளி மூடக்கூடிய அளவிற்கு வந்துள்ளது. இதில் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
பொதுமக்களும் ஊடகங்களும் இந்த ஆலை நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்யும்போதெல்லாம் இந்த டான்சம் பள்ளியை அரசாங்கம் சற்று கவனத்தில் கொண்டிருந்தால் இன்று 20 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து இவ்வளவு தனியார் பள்ளிகளின் வாகனங்கள் இந்த ஆலங்குளத்திற்கு வர வேண்டிய அவசியமே கிடையாது.
இப்படி நிர்வாகச் சீர் கேட்டால் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் ஆலைக்கு சொந்தமான, கேரளாவில் இருந்த விற்பனை நிலையங்கள் புனலூர், எர்ணாகுளம் அதேபோல் கர்நாடகாவில் பெங்களூரு பாண்டிச்சேரியில் வில்லியனூர் டெப்போ இப்படி ஏராளமாக பரந்து விரிந்து ஆலமரம் போல் இருந்த ஆலையை முடக்கி விட்டார்கள்.

அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஓய்வு பெற்றவுடன் புதிதாக தொழிலாளர்களை நியமிக்காததன் விளைவாக இந்த ஆலை சரிவை சந்திக்க ஆரம்பித்ததுஆலையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மாறி மாறி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை எத்தனையோ மருத்துவர்கள், பொறியாளர்கள் ,வெளிநாடுகளில் பணியாற்ற காரணமாக இருந்த இந்த டான்சம்பள்ளியின் அவல நிலையை எச்சரித்தது போலத்தான், ஆலையை நவீனப்படுத்தவும் தொடர்ந்து எச்சரிக்கை மணியை ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறோம்.
ஆலங்குளம் டான்செம் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை முழுமையாக இயங்கிக் கொண்டிருந்தபோது ஆலங்குளம் 24 மணி நேரம் ஆட்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய தூங்க நகராக விளங்கியது.
ஆனால் இன்றுஇரவு 8 மணிக்கு மேல் ஆலங்குளத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத அளவுக்கு பின் தங்கிய பகுதியாக மாற்றிய பெருமை இந்த சிமெண்ட் ஆலைநிர்வாகத்தையே சாரும்.