ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர்.
ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன. இதனால் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இவாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஓஃபுனாடோ காட்டில் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி வெளியேறிய 1,200 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் கூறுகையில், 1992-ம் ஆண்டு குஷிரோ, ஹொக்கைடோவில் ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பிறகு இது மிகப்பெரியது என்று கூறினர்.