• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பகுதியில் ஆபத்தான நிலையில் கிரசர் வண்டிகள் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 21, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பாலமேடு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிரஷர் நிறுவனங்கள் அதாவது கல்குவாரிகள் உள்ளது. இந்த குவாரிகளில் இருந்து மணல் ஜல்லி உடை கற்கள் போன்ற பொருட்களை ஏற்றி செல்லும் கிரசர் வண்டிகள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செல்வதால் விபத்து ஏற்படும். அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக வாடிப்பட்டி முதல் பாலமேடு வரை சாலை மிக மோசமாக உள்ள நிலையிள் கிரசர் வண்டிகளுக்கு பின்னும், பின்னும் செல்லும் வாகனங்களில் செல்லும் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் கிரசர் வண்டிகள் செல்வதாகவும், ஆபத்தான நிலையில் உடை கற்களை வண்டிகளில் அதிக அளவு ஏற்றி செல்வதால் ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகவும், ஆகையால் கிரசர் வண்டிகளை போதிய பாதுகாப்புடன் இயக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.