சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான் பேருந்து நிலையம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின் கம்பத்தால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், குறிப்பாக வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வருவதில் இந்த மின்கம்பம் இடையூறாக இருப்பதாகவும், ஆகையால் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு சில பேருந்துகள் தவிர அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று செல்வதால் பயணிகள் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர்.

போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.










