விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் காலனி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை என்று கூறி உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

கிராம நிர்வாகம் கண்டு கொள்ளாததால் இன்று அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க திடீரென சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தத்தில் காலனி பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை நேரம் அப்பகுதியில் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இருப்பதால் வேலைக்குச் செல்லும் வாகனங்கள் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் செல்ல வழி இன்றி தவித்தன.

மீறி விலகிச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் அப்பகுதிப் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சலசலப்பு காணப்பட்டது. தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் விரைவில் நடவடிக்கைப்படும் என சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.








