• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

பிரமாண்டமாக துவங்கிய பிஎஸ்ஜிஆர் மகளிர் கல்லூரி..,

BySeenu

Sep 27, 2025

கோவை தனியார் மகளிர் கல்லூரி வளாகத்தில் ‘கரிஷ்மா 25’ என்ற பிரமாண்டமான கலாச்சார விழாவை சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கல்லூரி தலைவர் நந்தினி ரங்கசாமி ,கல்லூரி முதல்வர் ஹரதி மற்றும் செயலாளர் யேசோதா தேவி ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பின்னணி பாடகர்கள், அரவிந்த் சீனிவாஸ், ராஜ் கணபதி, ரஜில் ராஜ் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இந்த விழாவில், குழு நடனம் , இசைக்குழு , வினாடி வினா , குறும்படம் , தனி நடனம் , விவாதம், தலைமை நிர்வாகி தேர்வு , புதையல் வேட்டை மற்றும் தொடக்க யோசனை போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இறுதியில் “கரிஷ்மா சர்வஸ்ரேஷ்ட” பட்டம் வழங்கப்பட்டு, வெற்றியாளர்களுக்கு ரூ.1,00,000 ரொக்கப் பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு மாணவர்களின் திறமைகளையும், கலாச்சார பிணைப்பையும் வெளிப்படுத்திய மறக்க முடியாத விழாவாக அமைந்தது.