தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியத்தில் அமைந்திருக்கும் தும்மகுண்டு, மேகமலை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளில் இருக்கும் மலை கிராமங்களில் வனத்துறை தடை காரணமாக சாலைகள் அமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக மலை கிராமமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில்.

மலை கிராமங்களில் சாலை வசதி அமைத்துக் கொடுத்து பட்டா இல்லாமல் வசிக்கும் மலை கிராம விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனி மாவட்ட பாஜகவினர் சார்பாக கடமலை – மயிலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடும்பாறை வருசநாடு சாலையில் பேரணியாக வந்து மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசம் எழுப்பிய அக்கட்சியினர்.

மலை கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை விரைவில் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
விரைவில் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்டமாக பாஜக மாநில தலைவர் தலைமையில் இப்பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தெரிவித்தார்.




