சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலப் பணிகளும் தொடங்க இருப்பதால், அப்பகுதியில் வரும் காலங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கூறியுள்ள அவர், அதற்கு மாற்று இடமாக சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்
அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த இனி யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலப் பணிகளும் தொடங்க இருப்பதால், அப்பகுதியில் வரும் காலங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கூறியுள்ள மாநகர காவல் ஆணையர் அருண், அதற்கு மாற்று இடமாக சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். காவல் ஆணையரின் இந்த உத்தரவை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரவேற்றுள்ளனர்.