நாகர்கோவிலில் பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கண்டன கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி காண முடியுமா? என மேயர் மகேஷ் சவால் விடுத்தார்.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த இடத்திலும் உச்சரிக்காததை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, தமிழகத்தை இரண்டாம் தாய் நோக்கில் பார்ப்பதை கண்டித்தும், திமுக சார்பில் கடந்த 8-ம் தேதி அன்று தமிழகத்தில் திமுகவின் 76_மாவட்டங்களிலும் மோடி அரசின் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அணுகு முறையை கண்டித்து,


குமரி கிழக்கு மாவட்ட சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலின் முன் பகுதியில் பிரதமர் மோடியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நடந்த கூட்டத்தில் பேசிய மேயர் மகேஷ்,

நிர்மலா சீதாராமன் இந்தியாவில் எந்த ஒரு நாடாளுமன்ற தேர்தலிலும், இதுவரை போட்டி இடாமல், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக முதலில் இராணுவ அமைச்சராக பதவி வகித்தவர், இப்போது நிதி அமைச்சராக பிரதமர் மோடியின் தயவில் இருக்கிறார்.

இந்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு சவால் விடுகிறேன். நிர்மலா சீத்தாராமன் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள எந்தவொரு நாடாளுமன்ற தொகுதியில் நின்று போட்டியிடும் தில் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக அகில இந்திய தொ.மு.ச போரவை செயலாளர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான சண்முகம் பங்கேற்றார்.


நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஃப்.எம்.ராஜரத்தினம், கன்னியாகுமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்றனர்.
