அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைப்பெற்றது. மாநில பொதுச் செயலாளர் ராதிகா தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சியிலும் உடனே தொடங்க வேண்டும்.

பண்டிகை காலத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், பேரூராட்சிப் பகுதிகளிலும் நகர்புற வேலைத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேரணியாக சென்று ஆட்சியர் ஆகாஷிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மாநில துணைச் செயலளர் லதா, மாவட்டத் தலைவர் மாலா, மாவட்டச் செயலாளர் சுபாதேவி உள்ளிட்ட நாகை, கீழ்வேளூர், வேதராண்யம், தலைஞாயிறு, கீழையூர், திருமருகல் ஒன்றியங்களுக்குக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இருந்தும் 200 க்குப் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.