விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இந்து சமயத்தை கொச்சை படுத்தும் விதமாகவும் பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன் முடியை கண்டித்தும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் கண்டன ஆர்பாட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராகவும் பெண்களை இழிவு படுத்தியும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் பொன்முடி மீது மீது நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக வினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராகவும் பொன்முடிக்கு எதிராகவும் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது காவல்துறையினருக்கும் அதிமுகவிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த பகுதியில் இந்த பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 300 க்கு அதிமுகவினர் கலந்து கொண்டனர்.