புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் புறக்கணிக்கப்படுவதாக காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்ட உள்ளூர் அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்களை புறக்கணிக்கப்படுவதாகவும் புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர் உரிமத்தை வைத்துக்கொண்டு நாங்கள் தமிழகத்தில் பணி செய்ய முடியாது எனவும் வெளியூர் ஒப்பந்தர்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இதனால் உள்ளூர் அரசு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் வேலையை இழப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் செயற்பொறியாளர், தலைமை பொறியாளர், புதுச்சேரி மாநில முதல்வர் இவர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் எங்களது வாழ்வாதாரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது கோரிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.





