தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தஞ்சை மாவட்டக்குழுக்களின் சார்பில், குடிமனை, குடிமனைப் பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, செவ்வாய்க்கிழமையன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா , அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் சி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், எம்.செல்வம், என்.சரவணன், ஆர்.கலைச்செல்வி, எஸ்.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வி.ச, வி.தொ.ச, அரங்க நிர்வாகிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் மனைப்பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், ‘தமிழ்நாட்டில் பல்வேறு வகையான அரசு தரிசு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வருகிற, பட்டா இல்லாத லட்சக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்தை தீர்மானித்து பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.