நாகை மாவட்டம் நாகூர் அருகே உத்தமசோழபுரம் கிராமத்தில் 49.50 லட்சம் மதிப்பில் கடல் நீர் உட்புகளை தடுக்க தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கனவு திட்டமான தடுப்பணையை உத்தமசோழபுரத்திற்கு பதிலாக பூதங்குடி கிராமத்தில் கட்ட வலியுறுத்தி இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழக காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனர். வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் கதவணையால் கடல் நீர் உட்புகுந்து 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் பாலாகும் பேராபத்தை தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பூதங்குடியில் தடுப்பணையை கட்ட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக பிரதான வாயில் கதவை அடைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே திடீரென பிரதான வாயில் கதவை போலீசார் தடுப்பை மீறி தள்ளி கொண்டு விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்றனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)