தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி மில் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைக்க தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் மங்கையர் செல்வன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மீனவ பஞ்சாயத்தௌ சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு கடற்கரை வரைவு மேலாண்மை திட்டங்களை வெளியிட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் புதுச்சேரியில் கடற்கரை பொது சொத்துக்கள் 612 ஏக்கர் பதியப்பட்டுள்ளன. ஆனால் 551 ஏக்கர் பொது சொத்துக்கள் இன்னும் பதியப்படவில்லை. இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் 575 ஏக்கர் பதியப்படாமல் உள்ளது.

மீனவர்கள் உரிமைகளுக்கு எதிராகவும் பெரு முதலாளிக்கு ஆதரவாகவும் மீனவர்களின் பொது சொத்துக்களை தாரைவார்க்கும் திட்டமிடும் புதுச்சேரி அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு வகையில் புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் என்று மங்கையர் செல்வம் தெரிவித்துள்ளார்.