காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் தீவிரவாதி தாக்குதலால் 28 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் பஹல்காம் பள்ளத்தாக்கில் தீவிரவாதி தாக்குதலால் 28 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பறக்கட்டும், பறக்கட்டும் ரப்பேல் விமானம் பறக்கட்டும் தாக்கட்டும், தாக்கட்டும் ஏவுகணைகள் பாகிஸ்தானை தாக்கட்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பார்வையாளர் பண்ணை வயல் இளங்கோ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் ஆர்ப்பாட்ட முடிவில் புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்டத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேதத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை உடனடியாக கண்டறிந்த இங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.