• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அதிமுக மகளிரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Apr 21, 2025

திமுகவின் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் விலைமாதர்களை சைவம் வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மகளிர் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியை திமுகவின் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அமைச்சர் பொன் முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவது ஏற்புடையதல்ல அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி சார்பாக முன்னாள் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை செல்லூர் 60 ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.