மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு மத்திய அரசு மின்சார திருத்த சட்ட மசோதா மற்றும் அணுசக்தி மசோதா, மக்களை பாதிக்கின்ற சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொழிற்சங்க தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் மின் கழக தொ.மு.ச கோட்டச் செயலாளர் வீர மணிகண்டன், தலைவர் அருண்பிரகாஷ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ்குமார், மற்றும் நாகநாதன்,தனபாண்டியன்,இன்ஜினியர் யூனியன்
அருணோதயம், சிவசீலா, சிவாநிஷாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.,





