தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஹோலி கிரைஸ்ட் தனியார் பள்ளி சார்பாக ஆர்.டி.இ நிதியினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து கண்டன போராட்டத்தை தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் அரசு வழங்கியுள்ள 25 சதவீதம் இட ஒதுக்கி ஒதுக்கீட்டின் மூலம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக அந்த மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கல்வித் தொகையினை மத்திய அரசு அறுவது சதவீதமும் மாநில அரசு 40 சதவீதம் வழங்கி வருகிறது. இந்த நிதி
யை வருடம் தோறும் மாநில அரசு பள்ளிகளுக்கு வழங்கியபின் மத்திய அரசுக்கு யு ஜி. சர்டிபிகேட் அனுப்பி பின் மாநில அரசு வாங்கிகொள்ள வேண்டும்.இந்நிலையில் இந்த நிதியை வழங்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் சார்பாக கருப்பு பேட்ச் அணிந்து கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

ஒரத்தநாடு ஹோலி கிரைஸ்ட் பள்ளியின் தாளாளர் செல்வம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.











; ?>)
; ?>)
; ?>)