பழனியில் அதிமுக சார்பில் உயிர் இழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். பொம்மை முதல்வர் ஸ்டாலினை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்க வைப்போம் என அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் தனிப்படை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து அஇஅதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் பழனியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமையில் அ.இ.அ.தி.முக ஐ.டி விங்க் மதுரை மண்டல பொருளாளர் அப்துல்சமது ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நெய்க்காரப்பட்டி பேரூர் கழக செயலாளர் விஜய சேகரன் மற்றும் பழனி ஐ டி விங் சதீஷ்குமார் மற்றும் ராஜேந்திர குமார் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.