தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்களை நடத்தும் ஏற்பாடுகளையும், முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்சாரம் முதல் இணைய தள இணைப்பு வரை, ஊரக வளர்த்துறை அலுவலர் மற்றும் நகராட்சித்துறை அலுவலர்கள் செய்ய உத்தரவிடப்பட்டு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முகாம்கள் நடந்த பின் முகாம் நடத்திய நிதியை வழங்குவதில் அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியும், நிதியை விரைந்து வழங்க கோரியும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட துணை தலைவர் பெரியகருப்பன், ஆசை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முகாம் நடத்திய நிதியை விரைந்து வழங்க கோரியும், முகாம் நடத்தியதன் மூலம் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.








