திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலூர் பகுதியில் புதிதாக சுங்கச்சாவடியானது கட்டப்பட்டது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்.பகுதியில் நாள்தோறும் விவசாயிகள் ஏராளமானோர் கோவை, திருப்பூர்,பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நாள்தோறும் விவசாயிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சென்று வருவதால் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் சூழல் இருப்பதாகவும் எனவே சுங்கச்சாவடிக்கு 10 கிலோமீட்டர் அருகாமையில் உள்ள பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங்கிட கோரி அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.








