தமிழகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புமுகாம் கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு மண்டபம், நாற்காலிகள் ஒலிபெருக்கி, கம்ப்யூட்டர், பந்தல், உணவு, 30 ஸ்டால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒரு முகாமிற்கு குறைந்தபட்சம் ரூ ஒன்றை லட்சம் முதல் ரூ 2 லட்சம் வரை செலவாகிறது.

ஆனால் இதற்காக இதுவரைநிதி ஒதுக்கப்படவில்லை. இதனையொட்டி நேற்று தமிழகம் முழுவதுமாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கறுப்பு பட்டை அணிந்துவெளிநடப்பு,ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம்பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நேற்று மாலையில் கறுப்பு பட்டை அணிந்து வெளிநடப்பு,ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைவட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் தங்கமுத்து முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்து சங்கத்தை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பணியில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் அவர்கள் கறுப்பு துணியிலான பேஜ்அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். துறை சார்ந்த அன்றாட பணிகளுக்கு இடையே முகாம் தொடர்பான பணியில் பணிநெருக்கடியை தவிர்க்க வேண்டும். என்பது உள்பட பல்வேறுகோரிக்கையை வலியுறுத்தினாாார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜாமணி நன்றி கூறினார்