மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரிகல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் சார்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இருந்து அலுவலர்கள் 100க்கும் மேற்பட்டோர் அரசு கல்லூரி அலுவலர்களுக்கு வழங்குவது போல உதவி பெறும் கல்லூரி அலுவலர்களுக்கும் பதிவு உயர்வு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிடவும், 10.03.2020க்குமுன்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்ற உதவி பெறும் கல்லூரி அலுவலர்களுக்கும் முன் ஊதிய உயர்வை வழங்கிடவும் நூலக உதவியாளர்களுக்கும் பணி மேம்பாடு வழங்கிடவும் கருணைப் பணி நியமனம் மறுப்பு ஓய்வூதிய கோப்புகளை அனுப்புவதில் தாமதம் போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிவகாசி அஞ்சா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திடவும் கருணைப் பணி நியமனம் வழங்கப்படில் நேரடி நியமனங்களுக்கு அனுமதி மறுத்திடவும் உள்ளிட்ட இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டல தலைவர் வீரவேல் பாண்டி மேனாள் பொதுச் செயலாளர் ஓய்வு பெற்ற கல்லூரி அலுவலர் சங்கம் மண்டல செயலாளர் கல்யாண சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.