உசிலம்பட்டியில் சிலிண்டர் தட்டுப்பாடு, ஓன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இந்தியன் கேஸ் ஏஜென்சி அலுவலகம் எதிரில் திமுக சார்பில் தேமுதிக,காங்கிரஸ்,விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இணைந்து திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமையில் முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் முன்னிலையில் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து சிலிண்டர் தட்டுப்பாட்டையும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்,

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திருமங்கலத்தில் அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் இங்கே வருகை தந்திருக்கும் ஓபிஎஸ் ன் தம்பிமார்களையும் இணைத்துக் கொண்டதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு இந்த கையாலாகாத மோடி அரசு தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்லாது இந்திய மக்களை 60 ஆண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி எடுத்துச் செல்லும் கேஸ் தட்டுப்பாடு, உணவகங்கள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது கிராமத்து மக்கள் விறகை விலைக்கு வாங்கி சுள்ளியை பொறுக்கி அடுப்பு எரிக்கின்ற சூழல் தமிழ்நாடு முழுவதும் ஆதிவாசி காலத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில் உள்ளதை இந்த மோடி அரசை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
காஷ்மீரில் நடந்த சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் படுகொலை செய்தார்கள் அந்த படுகொலை செய்ததற்கு இந்த மோடி அரசு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ன் பேச்சைக் கேட்டு போரை நிறுத்தி விட்டார். பாகிஸ்தானை அடிக்கக்கூடிய எதிர்க்கக்கூடிய தியாகி இல்லை எடப்பாடி பழனிச்சாமி.,மோடி ஜி அவர்களுக்கு
இன்று ஒரு வார காலமாக பத்து நாட்களாக வளைகுடா போர் நடந்து வருகிறது.

பத்து நாளில் நமது நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுகின்றது என்றால் இன்னும் பத்து நாட்கள் தொடர்ந்து இந்தப் போர் நடந்தால் இந்திய மக்களும் தமிழ்நாட்டு மக்களும் விறகு பொறுக்கி தீ எரிப்பதை தவிர வேறு வழி இல்லை அப்படிப்பட்ட இந்த மோடி அரசுக்கு நாம் அனைவரும் வருகின்ற தேர்தலில் கண்டிப்பாக ஒன்று பட்டு தேசிய முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் அயராவது பாடுபட்டு முதல்வர் ஸ்டாலின் கருத்தை வலுப்படுத்துவோம் என பேசினார்.
இதில் தேமுதிக நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் ஒய்.எஸ்.டி.சமுத்திர பாண்டியன், வில்லானி செல்வம், பூச்சிபட்டி சுரேஷ், வாசக ராஜா, வேல்முருகன், அழகுராஜா, போத்திராஜா மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



