மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்திற்கு கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வரை அரசு பேருந்து சேவை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் திடீரென நிறுத்தப்பட்ட பேருந்து சேவையால் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல பெரும் சிரமத்தை சந்தித்து வந்த சூழலில், பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் கடந்த இரு மாதங்களாக தொடர் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.,


தற்போது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் இன்று பள்ளியை புறக்கணித்து விட்டு சீருடையுடன், தங்கள் பெற்றோருடன் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.,
போக்குவரத்து பணிமனையின் கிளை மேலாளர் தற்காலிகமாக பேருந்து சேவை வழங்குவதாகவும், விரைவில் நிரந்தரமாக பேருந்து சேவை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் இதற்கு உடன்பாடாததால்,
இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, மதிய வேலையில் பணி மாற்றம் செய்ய வந்த ஒட்டுநர், நடத்துனர்களும் பணிக்கு செல்ல முடியாமல் காத்திருந்தனர்., தொடர்ந்து 3 மணி நேரமாக கண்டன கோசங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வந்த மாணவ மாணவிகளில் சிலர் மயக்கமடையும் நிலைக்கு ஆளாகினர்.,

இதனை அறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சுரேந்திரக்குமார், போராட்ட குழுவினருடனும், போக்குவரத்து பணிமனை மேலாளர் தினேஷ் இடமும் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதைக்கு தற்காலிகமாக பேருந்து சேவை வழங்குவதை ஏற்றுக் கொண்டு, ஒரு வாரத்திற்குள் நிரந்தரமாக பேருந்து சேவை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற மாணவ மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மேலாளர் ஒப்புக்கொண்ட சூழலில் மாணவ மாணவிகள் நலன் கருதி போராட்டதை கைவிடுவதாக அறிவித்தனர்.,
மேலும் ஒரு வார காலத்திற்குள் பேருந்து சேவை வழங்க வேண்டும் இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.,




