• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Jun 23, 2025

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் அலுவலகம் எதிரே ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்கள் சங்கம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக எஸ்டி, எஸ்டி பிரிவு சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இணைந்துஓய்வூதியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க செயலாளரின் சீனிவாசன் கூறுகையில்,

தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. ஓய்வூதியம் வழங்க குறை ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் அனைத்து அரசு பணியாளர்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது மாத இறுதி நாட்களில் ஓய்வூதியம் வழங்காத அரசினையும், பல்கலைக்கழகத்தினிலும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 1177, ஆசிரியர் ஓய்வூதியர்கள் 226, அலுவலக ஓய்வூதியர்கள், 514 குடும்ப ஓய்வூதியர்கள், 437 இவர்களுக்கு கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் நான்கு ஆண்டுகளாக மாத இறுதி நாட்களில் ஓய்வு ஊதியம் வழங்கப்படுவதில்லை 10 நாட்கள் இழுப்பது ஒரு மாதம் இரண்டு மாதங்கள் என்று காலம் தாழ்த்தியே ஓய்வூதியம் தரப்பட்டு வருகிறது. நிர்வாகம்

கடந்த மே மாதத்திற்குரிய ஓய்வூதியம் (23 6 20 25) வழங்கப்படவில்லை. கடந்த ஜூலை 2024 முதல் நவம்பர் வரை தரவேண்டிய ஐந்து மாதங்களுக்கான அகவிலைப்படி மற்றும் 2025 ஜனவரி மாதம் மே மாதத்திற்கான ஐந்து மாதங்கள் அகவிலைப்படி ஓய்வூதியங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கு பென்சன்களை வழங்க வேண்டும் என்று தீர்ப்பானையும் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதனை பல்கலைக்கழக நிர்வாகம் பின்பற்றவில்லை.

ஊழியர்கள் போராடி கொண்டே இருக்க வேண்டும் என்பதால் எதற்கு இந்த அரசு என்று கேள்வி எழுப்பப்பட்டது.