மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு ராமலிங்கம்:-
மத்திய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக நான்கு தொகுப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
தொழிலாளர்கள் சார்பில் 7000 கோடி ரூபய் நிதி உள்ளது.அதனை மத்திய அரசு கையில் எடுத்தால் தமிழகத்திற்கு பணம் வராது பல்வேறு வட மாநிலங்களுக்கு சென்று விடும் என்று தெரிவித்தனர்.1982-ம் ஆண்டு போராடி 1996-ம் ஆண்டு இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது அதனை தற்போது மத்திய அரசு மீண்டும் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்

தொகுப்பு சட்டத்தில் தொழிற்சங்கம் பதியக்கூடிய உரிமையை இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பெண்கள் இரவு முழுவதும் வேலை செய்யலாம் என்று இந்த சட்டத்தில் உள்ளது அவை அனைத்தும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.








