தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியிலுள்ள பொதுமக்கள் மீதான கொடூர தாக்குதல் மற்றும் மயான நில விவகாரத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பார் ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.

சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு கிராம மக்களிடம் இச்சம்பவத்திற்காக மொத்தமாக ₹9 லட்சம் பேரம் பேசி முடித்துவிட்டதாகக் கூறி பொதுமக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் அவமதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டு வரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கோரி கிராம மக்கள் மனு.!









