உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசுன் முருகேசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

கோழி பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் பகுதியில் விவசாயிகள் கோழிப் பண்ணைகளில் குஞ்சு இறக்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக நேற்று இரவு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசன் முருகேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.,

இதனை கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பு செயலாளர் நேதாஜி தலைமையில் பல்வேறு விவசாய சங்கங்களின் விவசாயிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
ஈசன் முருகேசனை விடுதலை செய்ய கோரியும், முன் அறிவிப்பின்றி கைது செய்ததாக குற்றம் சாட்டி காவல்துறைக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,




