மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் சாத்தூர் அருகே ஒத்தையல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அவர்கள் வழிகாட்டுதல் படி மத்திய அரசை கண்டித்து முகத்தில் கருப்பு துணி அணிந்தும் மகாத்மா காந்தி புகைப்படம் உள்ள பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது.இதில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டனர்.
இந்நிகழ்வில் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்மோகன் மற்றும் மேற்கு வட்டார துணைத்தலைவர் முத்துவேல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






