விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் S G சூர்யா தொலைக்காட்சி நிகழ்ச்சி முடித்து வெளியே வரும்பொழுது திமுகவினர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் SG சூரியாவை தாக்கியதாக கூறி தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கருப்பசாமி தலைமையில் இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு நகர தலைவர் சக்திவேல் மற்றும் வடக்கு நகர தலைவர் அஜய் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




