கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் கிருஷ்ணகுமார் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். அவரின் மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக்கோரி ஆறாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தக்களம் அருகில் தென்னந் தோப்பிற்கு தோட்ட வேலைக்கு சென்ற பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துவீரன் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார், 27 வயது நிரம்பிய இளைஞர் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின் வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அதே மின்சார வேலியில் சிக்கி அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமைமாடு ஒன்றும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
உயிரிழந்த கிருஷ்ணகுமாருக்கு திருமணம் முடிந்து ஆனந்தி, ஜஸ்வந்த் என்ற கைகுழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கினாலும் தனியார் தென்னந்தோப்பு உரிமையாளரின் அஜாக்கிரதையாளும் உயிரிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. எனவே அவரை கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக ஆறாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரிய பரபரப்பு நிலவு வருகிறது. பெருமளவில் காவல்துறையினரை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)