• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு முறைகேடு..,

BySeenu

Sep 11, 2025

கோவை, வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு – க்காக 300 க்கும் மேற்பட்ட இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தகுதி கோரி தேர்வு எழுதி இருந்தனர்.

இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தராமல் குறைந்த அளவு மதிப்பெண் பெற்ற 23 இணைப் பேராசிரியர்களக்கு மட்டும் பேராசிரியராக பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பதவி உயர்வு வழங்கியதை கண்டித்தும் அதிகளவு மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரியும்
இணை பேராசிரியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் பல்கலைக் கழக வளாகத்தில் நுழைவாயில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது இந்த தகுதி தேர்வில் அதிக அளவு மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.. குறிப்பிட்ட 23 பேருக்கு மட்டும் பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இது ஏன் ? என்று பல்கலைக் கழக பதிவாளரிடம் கேட்ட போது சரியான முறையில் பதில் அளிக்கவில்லை .
எனவே பல்கலைக் கழக நிர்வாகத்தை கண்டித்தும் அதிக மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கும் பதவி உயர்வு கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தனர்..