• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டு பரிசாக ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

Byவிஷா

Jan 2, 2024

தமிழ்நாட்டில் புத்தாண்டு பரிசாக, 19 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ஐபிஎஸ் அதிகாரிகள் தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, வெண்மதி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், ராமர் மற்றும் மகேஷ் குமார் ஆகியோருக்கு டிஐஜி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் போலீஸ் ஐ.ஜி.க்கள் ஆனந்தகுமார் சோமணி,  தமிழ் சந்திரன் ஆகியோருக்கும் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.