• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தடை செய்யப்பட்ட காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சுங்கச்சாவடியில் சோதனை

ByKalamegam Viswanathan

Mar 11, 2025

மதுரை சிந்தாமணி சுற்றுச்சாலை சுங்கச்சாவடியில் மதுரை மத்திய வட்டார போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களில் தடை செய்யப்பட்ட காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்) சோதனை நடைபெற்றது.
லாரி மற்றும் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பானை பறிமுதல் செய்து 8 வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசின் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஒலி ஹாரன் (காற்று ஒலிப்பனை) சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மதுரை மத்திய வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன் தலைமையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கப்பாண்டி, ரமேஷ் குமார், காந்திக் மற்றும் சார்பு ஆய்வாளர் சரவணகுமார். மற்றும் போக்குவரத்து காவலர்கள் மதுரை சிந்தாமணி சுங்க சாலை அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர் அதில் மூன்று லாரிகள் ஐந்து பேருந்துகள் உட்பட கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பான் கருவிகளை பஸ், மற்றும் லாரிகளில் பொருத்தி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மதுரை மத்திய வாகன வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மனோகரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கபாண்டியன் ரமேஷ் குமார் கார்த்திக் ஆகியோர் சோதனை செய்து பஸ் மற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒழிப்பானை பறிமுதல் செய்தனர்.

மேலும் விதிகளை விதிமுறைகளை மீறி வாகனங்களில் காற்று ஒழிப்பானை பொருத்தியதால் கனரக வாகனங்களுக்கு தலா 1 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டது, கனரக வாகனங்களில் காற்று ஒழிப்பான் (ஏர் ஹாரன்)பொருத்தி ஓட்டுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூரால் விபத்து ஏற்படுகிறது.

தமிழக அரசின் சுற்றறிக்கை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் கனரக மற்றும் இலகுரக வாகனங்களில் காற்று ஒழிப்பானை ஒழிக்க தடை செய்யும் பொருட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.