• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பெண்களுக்கு சேலை வழங்கிய பேராசிரியர் சீனிவாசன்..!

ByKalamegam Viswanathan

Nov 8, 2023

பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு பெண்களுக்கு சேலை வழங்கினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் பகுதி பெண்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் மோடியை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண அழைத்து வருவதாக கூறினார்.

வாக்காளர்களுக்கு பணம் வாங்கி வாக்களிக்க வேண்டாம் எனக் கூறிய பேராசிரியர் இராம. சீனிவாசன் சேலையை வழங்கி தாமரை சின்னத்தில் வாக்களிக்க கோரிக்கை வைத்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரத்தில் பாஜக அவனியாபுரம் மண்டல் சார்பில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

அவனியாபுரம் மண்டல் தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சோலை மணிகண்டன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ராஜா வரவேற்புரை.கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் குறிப்பிடுகையில் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது உங்கள் ஜனநாயக கடமையை அளியுங்கள் ஐந்து வருடத்திற்கு 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் என்பது தீர்வாகாது.

உங்களுக்கு தேவையான மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்

நீங்கள் பாஜகவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால் இன்னும் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படும்.

பெண்கள் நீங்கள் அதிகமாக அனைவரும் பகுதிகளில் வாக்களித்தால் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பிரதமர் மோடியை நானே அழைத்து வருவேன் .

வரும் தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களியுங்கள். இந்த பகுதி மக்களுக்கு வேண்டிய மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் எனக் கூறினார்.

பணம் வாங்க வேண்டாம் எனக் கூறிய பாஜக மாநில நிர்வாகி இராம. சீனிவாசன் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கி தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க தேர்தலுக்கு முன்னே கோரிக்கை வைத்தது பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் பிரதமர் மோடியை ஜல்லிக்கட்டு போட்டியை காண அழைத்து வருவதாக கூறியதும் அரங்கில் பலத்த சிரிப்பொலி நிறைந்தது காணப்பட்டது.